சீனிவாச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம்

சீனிவாச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்

சீனிவாச பெருமாள் அலர்மேல் மங்கை தாயார் திருக்கல்யாண உற்சவம் சேலத்தில் விமரிசையாக நடந்தது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சுப்ரமணிய நகர் கிளை சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண மஹோற்சவ விழா இன்று நடைபெற்றது. கிளைத் தலைவர் வெங்கட்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்பல் மற்றும் மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திருக்கல்யாண வைபவத்தில் முதல் நாளான நேற்று மாலை ஜானவாசம் எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சபதி பூஜை தியானம், திவ்ய நாமம், அலங்கார அபிநயத்துடன் டோலோத்ஸவம் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீனிவாச திருக்கல்யாண மகோஸ்தவ விழா இன்று காலை சம்பிரதாய உச்சவிருத்தி உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சீனிவாச பெருமாளுக்கும் அலர்மேல் மங்கை தாயாரின் திருஉருவப்படத்திற்கு பட்டாடைகள் உடுத்தப்பட்டு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யத்தை காண்பித்து அலர்மேல் மங்கைக்கு சீனிவாசன் திருக்கல்யாண மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு சுப்பிரமணிய நகர் கிளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story