குண்டும் குழியுமாக மாறிய ஸ்ரீபெரும்புதுார் சர்வீஸ் சாலை

குண்டும் குழியுமாக மாறிய ஸ்ரீபெரும்புதுார் சர்வீஸ் சாலை

 ஸ்ரீபெரும்புதுார் சர்வீஸ் சாலை

சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக வாகனங்கள் செல்ல அவதிப்படும் நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 180க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. வல்லம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1,200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டுவர மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றி செல்ல என தினமும் லாரி, கன்டெய்னர், கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக வாகனங்கள் செல்ல அவதிப்படும் நிலையில் உள்ளது.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மாநில நெடுஞ்சாலை கட்டுபாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story