ஸ்ரீபுரந்தான் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா !

ஸ்ரீபுரந்தான்  ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமம். ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் பராந்தக சோழ மன்னன் காலத்து பிரசித்தி பெற்ற லஷ்மி நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா இன்று தொடங்கியது.வேத விற்பன்னர்கள் சிறப்பு ஹோமம் செய்து கடம் புறப்பாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். கோவில் கலசப்படத்திற்கு ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பொதுமக்களிடத்தில் தெளிக்கப்பட்டது. அப்போது அங்க கூடியிருந்த பக்தர்கள் நாராயணா, நரசிம்மா என பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story