ஸ்ரீரங்கம் - மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து கடைசி நாளாகும் பகல் பத்து பத்தாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உற்சவர் நம்பெருமாள் அசுரர்களிடத்திலிருந்து தேவர்களைக்காக்க மோகினியாக உருவெடுத்தார், இதனை உணர்த்தும் வகையில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளிபல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் உலாவந்து, அரையர்கள் சேவை எனப்படும் பாசுரங்களைக் கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9. 45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். அதன் பின்னர் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு இராப்பத்து வைபத்தின் முதல் நாளான நாளை டிசம்பர் 23-ம் தேதி அதிகாலை 4- மணிக்கு நடைபெறும்.

Tags

Next Story