ஸ்ரீரங்கம் - தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை சேர்ப்பதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் 138 பேருக்கு வருகிற 31ம் தேதியுடன் வேலை இல்லை என ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக புதிதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்களை பணியில் இருந்து நிறுத்தினால் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் எங்கே போவோம்?, தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக சுமார் 138 தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவில் நிர்வாகம் அவர்களது விருப்பத்தின்பேரில் ஆட்களை நியமித்துக் கொள்வது அவர்களது உரிமையாக இருந்தாலும் – தங்களது வாழ்வாதாரத்தை காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கோவில் தரப்பில் அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கோவிலில் தூய்மை பணிகள் பாதிக்கும். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story