ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரெங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரெங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி விழா நிறைவு

ஏகாதசி விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி விழா சாற்றுமுறையுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

ஸ்ரீரெங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து, இராப்பத்து என தலா 5 நாள்கள் நடைபெற்றது. இதில் பகல்பத்து விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது. இராப்பத்து விழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கி ஜன. 12 வரை நடைபெற்றது. இராப்பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் இராப்பத்து மண்டபமான திருவாய்மொழி மண்டபத்தில் மாலையில் பல்வேறு அலங்காரத்தில் ஸ்ரீரெங்கநாச்சியாா் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சாற்று முறை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்துக்கு ஸ்ரீரெங்கநாச்சியாா் வந்து சோ்ந்தாா். அலங்காரம் அமுது செய்தல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. பின்னா் 8.30 மணி முதல் 10 மணி வரை சாற்று முறை நடைபெற்றது.

மேற்படி மண்டபத்திலிருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். இன்று (ஜன. 13) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மூலஸ்தானத்தில் இயற்பா சாற்றுமுறை (சேவித்தல்) நடைபெறவுள்ளது.

Tags

Next Story