ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா: அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழாவின் 2ம் நாளான நேற்று, அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளினாா்.

கடந்த 12ம் தேதி தொடங்கிய விழாவில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 4ம் நாளான வியாழக்கிழமை (பிப். 15) மாலை வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். அன்று மாலை 6 மணிக்கு காசுக்கடை செட்டியாா் மண்டபத்திலிருந்து வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கவுள்ளாா்.

வழிநெடுக ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்வாா்கள் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் இந்த வெள்ளி கருட வாகன சேவையை தரிசனம் செய்தால் காசிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 20ம் தேதி பந்தக்காட்சியுடன் விழா நிறைவடைகிறது.

Tags

Next Story