ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
X

கும்பாபிஷேகம் 

திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்குட்பட்ட வஉசி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் 18ந்தேதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஆலாகனம், முதற்கால வேள்வியும் அதனைத் தொடர்ந்து கோபூஜையும் 2ம் கால வேள்வியும் நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்ணாஹுதி கடம்புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 மணியளவில் ஸ்ரீகமலாபீடம் நிறுவனர் பொறியாளர் சீத்தாசீனுவாச சுவாமிகள் மகாகும்பாபிஷேகம் நடத்திவைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகாகும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை 26வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ௧.பிரகாஷ் விழாக்குழு நிர்வாகிகள் எஸ்.பரசுராமன், எம்.முரளி ஏ.திவாகர், ஆர்.நாராயணன், எஸ். நாகமணி, பி.பாண்டியன், டி.கார்த்திகேயன் ஏ.நடராஜன்மற்றும் விழாக்குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story