மதுரை கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, பட்டு வஸ்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு சாற்ற கொண்டு செல்லப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடி கலைந்த மாலை,கிளி பரிவட்டம் ஆகியவைகள் மதுரை கொண்டு செல்லப்பட்டது.108 திவ்ய தேசங்களில் மிகவும் புகழ்பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை, கிளி பரிவட்டம் ஆகியவைகளை அணிந்து கொண்டு தான் இறங்குவார். இவ்வழக்கமானது பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா மதுரையில் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கலைந்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகிய பொருட்கள் ஆகியவைகள் மதுரை கொண்டு செல்லப்பட்டது. தல்லாகுளத்தில் நடைபெறும் எதிர் சேவையின் போது இவைகள் தங்கக் குதிரையில் எழுந்தருளும் கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு நாளை சித்திரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் கள்ளழகர் இறங்குவார்.

முன்னதாக நேற்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் பிரத்தியோக மலர்களால் மாலை தயாரிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாளுக்குஇன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மதுரைக்கு மாலை, கிளி,பரிவட்டம் உள்ளிடவைகள் செல்லும் நிகழ்ச்சியில் திருக்கோவில் அறங்காவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story