ஸ்ரீவில்லிபுத்தூர்: செங்கள் சூளை அதிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கள் சூளை அதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன் குளத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவர் கோதை நாச்சியார் புரத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவரது செங்கல் சூளையில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த முருகதாஸ் என்பவர் சரியாக வேலை செய்யவில்லை என ஞானசேகர் திட்டியதால், தனது மகன் மணிகண்டன் மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு வேறு சூளைக்கு சென்று விட்டார்.

மணிகண்டன் செல்லும் போது, ஞானசேகர் சூளையில் வளர்த்த புறாக்களை விட்டு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் வளர்த்த புறாக்களை எடுத்துச் செல்வதற்காக மணிகண்டன், ஞானசேகர் செங்கல் சூளைக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு புறாக்களை காணவில்லை. இது குறித்து ஞானசேகரிம் கேட்டதற்கு, பராமரிக்க இயலாதலால் புறாக்கள் பறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கடந்த 11ம் தேதி நள்ளிரவு விறகு பாரம் இறக்குவதற்காக சூளைக்கு வந்த ஞானசேகரை, மணிகண்டன் தனது நண்பர்கள் நாகராஜ் மற்றும் பேச்சிமுத்துவுடன் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர். இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வடக்கு காவல் துறையினர், கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், நாகராஜ் மற்றும் பேச்சிமுத்து ஆகிய மூவருடன், கொலைக்கு திட்டம் தீட்டி கொலையாளிகள் தப்பி செல்ல உடந்தையாக இருந்த ஹரிச்சந்திரன், முருகதாஸ், முத்துப்பாண்டிய ஆகிய 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Tags

Next Story