எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதல் பட்டதாரிகள் தின விழா

எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதல் பட்டதாரிகள் தின விழா

திருச்சி மாவட்டம் எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதல் பட்டதாரிகள் தின விழா எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதல் பட்டதாரிகள் தின விழா எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் செவிலியர் கல்லூரியின் முதல் பட்டதாரிகள் தின விழா நடைப்பெற்றது.இதில் தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் திரளான கூட்டத்தை கல்லூரியின் முதல்வர் Dr.சுஜா சுரேஷ் வரவேற்றார்.

எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு கவுன்சில் பதிவாளர் டாக்டர் ஆனி கிரேஸ் கலைமதி சிறப்புரையாற்றினார். இந்த தலைசிறந்த நிறுவனத்தில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கும் மற்றும் தேர்வான பட்டதாரிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் வாழ்த்து தெரிவித்தார். எஸ்.ஆர்.எம் திருச்சி செவிலியர் கல்லூரியின் தரமான கல்வி மற்றும் சேவைகளைப் பாராட்டிய அவர், நேர்மை மற்றும் தரத்தை நிலைநிறுத்தும் இந்த தகுதி வாய்ந்த நிறுவனத்தில் பட்டம் பெறுவது மிகச்சிறப்பு என்று கூறினார்.

மேலும் செவிலியர்களின் பார்வை, தலைமைத்துவம் மற்றும் செவிலியர் தொழிலில் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதில் 93 செவிலியர் மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும் மற்றும் 16 மாணவிகளுக்கு 20 மெரிட் விருதுகளும் வழங்கப்பட்டன. பட்டதாரிகளுக்கு முதல்வர் உறுதிமொழி செய்து வைத்தார் நிகழ்வில் எஸ்ஆர்எம் துணைத் தலைவர் திரு.நிரஞ்சன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story