எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா தாளாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமோகன் ஆண்டறிக்கை சமர்பித்தார். முன்னதாக பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்கள் கவுரவப்படுதப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக கெயின்அப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பொது மேலாளர் கங்காதரன் பங்கேற்று, 260 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றதால் மட்டும் கடமை முடிந்து விடவில்லை. இப்போதுதான் தொடங்குகிறது. இந்த நாட்டிற்கு சேவை செய்ய நல்லதொரு வாய்ப்பாக இந்த பட்டங்களை பயன்படுத்தி பலருக்கும் நன்மை செய்திட வேண்டும். உங்களை வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்த பெற்றோர்களை மறக்க கூடாது. கைவிடவும் கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் தொழில் முனைவராக அக முயற்சி செய்ய வேண்டும். வேலைக்கு செல்வது என்பது, சம்பாதிப்பது என்பது ஒரு வழி என்றாலும், தொழில் முனைவோராக ஆனால், பல ஆயிரம் பேருக்கு நீங்கள் வேலை கொடுக்கலாம். அதனால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். வாழ்வில் முன்னேற மூன்று விஷயங்கள் முக்கியம். அது கடின உழைப்பு மட்டுமே என்றார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
Tags
Next Story