புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா கொடியேற்றம்

புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா கொடியேற்றம்

புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியாா் திருத்தல ஆண்டு பெருவிழாவை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி ஜெபம் செய்து கொடியேற்றி துவக்கி வைத்தார்.

இத்திருவிழா வரும் பிப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளாக பிப்.4 ஆம் தேதி நற்கருணை பவனி, 5-ஆம் தேதி புனிதரின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. ஆண்டுப் பெருவிழா 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் பங்கேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறாா். இந்நிகழ்வில், பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு ஜி.குழந்தைராஜ், செயலக முதல்வா் ஞானபிரகாசம் மற்றும் பலா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மிகத் தந்தையா்கள் சகாயதாசன், பீட்டா் பிச்சைக்கண் மற்றும் புளியம்பட்டி பங்கு இறைமக்கள் செய்துள்ளனா்.

Tags

Next Story