புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாதக் கூட்டம்
புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாதக் கூட்டம்
கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் 32வது மாதக் கூட்டம் புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கம்பன்கழக துணைத் தலைவர் இராஜாமணி தலைமை வகித்தார். கோவில்பட்டிக் கம்பன் கழக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, பிஸியோதெரபிஸ்ட் செல்வின் ஜூலியஸ்,கடம்பூர் தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சரவணச் செல்வன் வரவேற்றார். மாணவர் உரை நிகழ்வில் முதலில் மதுரை கல்லூரி மாணவர் அரவிந்த பிரகாஷ் கலந்து கொண்டு "கம்பனில் கந்தன்” என்ற பொருளின் முருக கடவுளின் பெருமைகளை பட்டியல் இட்டு அரங்கம் அதிர பேசினார்.
தொடர்ந்து மதுரை பேராசிரியர் செந்தூரன் கலந்து கொண்டு தனது கம்பீர குரல் வளத்துடன் கருத்து செறிவுடன், தேவையான பாடல்களை பாடி மகிழ்ந்து "கம்பனை நேசிப்போம் " என்ற தலைப்பில் பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுனையரசன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் புனித ஓம் லட்சுமணப்பெருமாள் ஆலோசனைப்படி பொருளாளர் வினோத் கண்ணன், இணைச் செயலாளர் மதிவானன் மற்றும் புரவலர்கள் செய்திருந்தனர்.