புனித செபஸ்தியார் சர்ச் தேர்பவனி!

குமரப்பட்டி கிறிஸ்துவ பொதுமக்கள் சார்பில் புனித செபஸ்தியார் சர்ச் தேர்பவனி நடந்தது.
விராலிமலை ஒன்றியம் குமரப்பட்டியில் புனித செபஸ்தியார் சர்ச் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 17ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரப்பட்டி கிறிஸ்துவ பொதுமக்கள் சார்பில் கொடி பவனி நடந்தது. தொடர்ந்து பாத்திமாநகர் பங்குகுரு மைக்கில்ஜோ கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நிறைவேற்றினார். நேற்று முன்தினம் மாலை அருட் தந்தையர்கள் மைக்கேல்ஜோ, கிருஸ்துராஜ் ஆகியோர் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடத்தினர்.
இரவு 8 மணியளவில் செபஸ்தியார் அன்பு விருந்து எனப்படும் சிறப்பு அன்னதானம் நடந்தது. 10 மணியளவில் மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க மலர் மாலைகள், தோரணங்கள், வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செபஸ்தியார் உருவம் தாங்கிய தேர் பவனி நடந்தது. குமரப்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சர்ச் வளாகத்தை அடைந்தது. நேற்று மாலை கொடியிறக்கம் மற்றும் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.
விழாவில் குமரப்பட்டி, பாத் திமாநகர், மேலபச்சகுடி, கொட்டப்பட்டு, செவந்தான் னிப்பட்டி, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குகுரு தலை மையில் புனித செபஸ்தியார் அன்பியம் மற்றும் குட ரப்பட்டி கிறிஸ்துவ மக்கள் செய்திருந்தனர்.
