நர்சிங் படிக்கும் எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - : ஆட்சியர்

நர்சிங் படிக்கும் எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - : ஆட்சியர்

நர்சிங் படிக்கும் எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார் 

நர்சிங் படிக்கும் எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவ, மாணவியர் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில், 2022-2023 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள பழங்குடியினர் மாணவ மாணவியர் நர்சிங் டிப்ளமோ படிப்பிற்காக (Diploma in General Nursing and Midwifery Course), இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் டிப்ளேமா படிப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பயிற்சி கல்லூரிகளில் சேரலாம். அந்த கல்லூரிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகள் படிப்பதற்கு ஆகும் கல்விக் கட்டணம், புத்தகக் கட்டணம், விடுதிக் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும். இந்த தொகை முழுவதையும் அரசே ஏற்கும்.

எனவே 2022-2023 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ள, பழங்குடியின மாணவியர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்ந்துள்ள, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் மாணவ மாணவியரின் விவரங்கள், சாதிச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், 10, 12 ஆம்வகுப்பு மதிப்பெண்சான்றிதழ் நகல், 12 ஆம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் நகல் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்கான சான்று (Bonafide Certificate), ஆகிய அனைத்து நகல் (2 பிரதிகளில்) சம்மந்தப்பட்ட கல்வி நிறுனவனங்கள் மூலம் வருகிற டிச. 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், தகவலுக்கு கொல்லிமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நல அலுவலக, திட்ட அலுவலரை 9443836370 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story