கத்திக்குத்து; பெண் பலி

கத்திக்குத்து; பெண் பலி
X
பைல் படம்
குமரியில் கள்ளத்தொடர்பு காரணமாக கத்தியால் குத்தப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குமரி மாவட்டம் மருங்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் என்ற அப்துல்லா (43). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த லைசா (50) என்ற பெண் தொடர்பில் இருந்தார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி மதியம் நாகர்கோவில் வந்து லைசாவை சந்தித்து தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு, லைசா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலேஷ், லைசாவின் கழுத்தை பிடித்து நெரித்து, வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினார். படுகாயம் அடைந்த லைசாவை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அகிலேஷை கைது செய்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த லைசா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. வடசேரி போலீசார் லைசாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story