காவல் நிலையத்திற்குள் கத்தி குத்து

காவல் நிலையத்திற்குள் கத்தி குத்து

திவாகர் 

போடி நகர் காவல் நிலையத்திற்குள் குடும்ப பிரச்சனை குறித்து நடைபெற்ற விசாரணையின் போது விசாரணைக்கு வந்தவர் மூன்று நபர்களை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போடி அருகே உள்ள தேவாரப் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தாரணி இருவரும் திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆணை நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஏழு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஊர் பொதுமக்களாகவே ஒன்று கூடி சங்கராபுரம் கோவிலில் வைத்து இருவரையும் பிரிந்து வாழும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில் இருவரும் ஆறு மாத காலமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் இருவருக்கும் உண்டான பிரச்சனை தீர்வு காண்பதற்கு தேவாரம் காவல் நிலையம் உள்ள நிலையில். போடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியசாமியின் ஓட்டுநர் அசோக் என்பவர் அந்தப் பெண்ணின் உறவினராக கூறப்படுகிறது . இந்நிலையில் இருவருக்கும் உண்டான பிரச்சனையில் போடி நகர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை ஜெயக்குமார் ஒரு புகார் மனு வழங்கிய நிலையில் அதற்கான விசாரணைக்காக போடி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. தாரணையின் தந்தை ஜெயக்குமார் அளித்த புகார் மனுவில் தனது பெண் தாரணியை காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாரணி போடி நகர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது அஜித் என்பவர் உடன் திருமணம் முடித்த கோலத்தில் ஆஜரான நிலையில் அதே சமயத்தில் விசாரணைக்காக அவருடைய முன்னாள் கணவர் திவாகரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திவாகர் போடி நகர் காவல் நிலையத்தில் விட்டு வெளியே சென்று மீண்டும் உள்ளே வரும் பொழுது மறைத்து வைத்திருந்த கத்தியினால் தாரணி , அஜித் மற்றும் தாரணையின் உறவினர் வைரமுத்து மூவரையும் கத்தியால் குத்தி உள்ளார் .

காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காயம்பட்ட மூன்று நபர்களையும் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக தேனி கா.நா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பான போடி நகர் காவல் நிலையத்திற்கு உள்ளே மூவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே போடி நகர் காவல் நிலையம் நுழைவாயில் முன்பாக பெண் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் மொபைல் போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு உள்ளே மூவருக்கு கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story