வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்

கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் திருவையாறு பகுதியில் வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகளால் விவசாயிகள் கவலை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டு இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த ஆண்டு வைகோல் வாங்க வெளியூரில் இருந்து வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் வராததால் அறுவடை செய்யப்பட்ட வயல்களிலேயே வைக்கோல் தேக்கமடைந்துள்ளது . கடந்த சில ஆண்டுகளாக அரியலூர் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வைக்கோலை மொத்தமாக விலைக்கு வாங்கி சென்றனர் . வைக்கோல்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும் இதன் மூலம் அறுவடை இயந்திர செலவு, நெல் எடுத்து செல்லும் வாகன செலவு, கூலியாட்கள் செலவு ஆகிய அவற்றை விவசாயிகள் சமாளித்தனர் இதன் காரணமாக சேதமின்றி அறுவடை செய்து வயல்களில் வைக்கோல்களை பாதுகாத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு வெளியூரிலிருந்து வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் வராததால் வைக்கோல்கள் வயல்களிலே தேக்கமடைந்துள்ளது. இதனால் பாபநாசம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story