ஆத்தூர் : வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சார மேடையை அமைச்சர் ஆய்வு

ஆத்தூர் : வேட்பாளர்களை  ஆதரித்து முதல்வர் பிரச்சார மேடையை அமைச்சர் ஆய்வு

மேடை ஆய்வு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் மேடை,பந்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் ஏ.வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்ற இடத்தில் ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஏ.வ. வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story