திருப்புவனத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை - பொதுமக்கள் அவதி

திருப்புவனத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை - பொதுமக்கள் அவதி

திருப்புவனத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை

திருப்புவனத்தில் தேங்கி நிற்கும் சாக்கடையால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்

திருப்புவனத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக போலீஸ் சோதனை சாவடி அருகே சாக்கடை நிரம்பி வழிவதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.திருப்புவனம்-சிவகங்கை ரோடு அருகே நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இப்பகுதியில் திருப்புவனம் போலீசாரின் சோதனைச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ரோடு சந்திப்பு அருகே பெண்கள் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓட்டல்கள், டீக் கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இப்பகுதி கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வடிகால் வசதி உள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடிகால் சுத்தம் செய்யப்படவில்லை. அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நிரம்பி அந்த பகுதி முழுவதும் வெளியேறுவதுடன் துர்நாற்றமும் வீசி சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. சாக்கடை வெளியேறி நிற்பதால் பயணிகள் ரோட்டில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story