பள்ளி நுழைவாயில் முன் தேங்கிய மழைநீர்; மாணவர்கள் அவதி
கோவையில், பள்ளி நுழைவாயில் முன் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கோவை:மத்திய அரசின் இந்திய கல்வித்துறையால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகிக்கபடுகிறது.நாடு முழுவதும் செயல்பட்டு வரும் இப்பளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர்.மழை காலங்களில் இப்பள்ளியின் முன் தேங்கும் மழை நீரால் மாணவர்கள் அவதிபடுவது வாடிக்கையாகி விட்டது.
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசனிடம் பெற்றோர்கள் முறையிட்டனர்.இதனை தொடர்ந்து பள்ளி வந்த அவர் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வரிடம் அறிவுறுத்தினார்.இந்நிலையில் நேற்று முதல் கோவையில் தொடர் சாரல் மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் பள்ளி நுழைவாயில் முன் தேங்கி நிற்பதின் காரணமாக பள்ளியின் உள்ளே செல்ல மாணவர்கள் பெரிதும் அவதிபட்டனர். குழந்தைகள் அவதிப்படுவதை கண்ட பெற்றோர்கள் தற்காலிகமாக கற்களை போட்டு கடந்து வகையில் பாதை ஏற்படுத்தினர்.மழை காரணமாக தண்ணீர் தேங்கும்போது மாணவர்கள் அவதிபடுவது தொடர் கதையாகி விட்டதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.