திருமருகல் அருகே குடிநீர் தொட்டி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருமருகல் அருகே குடிநீர் தொட்டி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர் தேங்கியுள்ள குடிநீர் தொட்டி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே குடிநீர் திறப்பு தொட்டி அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீரில் கலக்கும் அபாய நிலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே குடிநீர் திறப்பு தொட்டி அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீரில் கலக்கும் அபாய நிலை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை திருமருகல் அருகே குடிநீர் திறப்பு குழாய் அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீரில் கலக்கும் அபாய நிலை இருப்பதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே டேங்கில் சேகரிக்கப்படுகிறது.அங்கிருந்து மருங்கூரில் உள்ள சேமிப்பு தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு அங்கிருந்து எரவாஞ்சேரி, மருங்கூர்,

வத்தூர்,துறையூர்,நெய்குப்பை,வேலங்குடி,கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மருங்கூரில் குடிநீர் சேமித்து மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீரை பிரித்து வழங்கும் தொட்டி அருகில் குழாயில் சிறிய உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து சாலையில் கழிவு நீராக தேங்கி நிற்கிறது.

இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அதே குழாயில் திரும்பச் செல்கிறது.

இதனால் இந்த குடிநீரை பயன்படுத்தும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் திறப்புக் குழாய் அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags

Next Story