திமுகவினர் வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
கள்ளகுறிச்சி மாவட்டம், சுத்தமலை திமுகவினர் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.
சுத்தமலை கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் தங்கராஜ், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி, மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story