ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் வருத்தமில்லை - EVKS இளங்கோவன்

ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று சொல்வதில்  வருத்தமில்லை - EVKS இளங்கோவன்

காங்கிரஸ்

ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் எனக்கு வருத்தமில்லை என EVKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகர் , வடக்கு , தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை , ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய EVKS இளங்கோவன் , யார் நல்ல ஆட்சி கொடுத்தாலும் அது காமராஜர் ஆட்சி தான் என்றும் , ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் தனக்கு சிறிதும் வருத்தமில்லை என்றும் , சில தவறுகள் இருக்கலாம் அதை திருத்திக்கொள்வோம் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story