நிதி கேட்கும் போது மட்டும் மத்திய அரசு என ஸ்டாலின் சொல்கிறார்-எம்எல்ஏ

நிதி கேட்கும் போது மட்டும் மத்திய அரசு என ஸ்டாலின் சொல்கிறார்-எம்எல்ஏ

செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ

நிதி வேண்டும்போது மட்டும் மத்திய அரசு என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் 38 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் மற்றும் குடிநீர் போர்வெல் அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ.ராஜன் செல்லப்பா கூறுகையில்: அங்கன்வாடி கட்டிடத்திற்கு 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு குடிநீர் போர்வெல் தோண்டுவதற்கு 24 லட்சம் என மொத்தம் 38 லட்சம் இந்தப் பகுதிக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. இது அரசாங்கம் செய்ய வேண்டிய பணி ஆனால் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது.

சென்னையைப் போல மதுரை ஆகி விடக்கூடாது என ஒரு நீதியரசர் சொல்லி இருக்கிறார். மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தத் திட்டமும் முறைப்படி செயல்படுத்தவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது ரோப் கார் அமைப்பதற்கு ஆறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான பூர்வாங்க வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. எந்த திட்டமும் முறைப்படுத்தப்படவில்லை ஒரே ஒரு திட்டம் கலைஞர் நூலகம் என்று திறக்கப்பட்டது ஆனால் அங்கு பத்து வாசகர்கள் கூட இல்லை பொருட்காட்சியை வேடிக்கை பார்ப்பது போல் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் காட்சி பொருளாக இருக்கிறது தவிர யாருக்கும் பயனில்லை. சென்னையில் வெள்ளம் பாதித்தவர்களுக்கு நிவாரண தொகை குறித்த கேள்விக்கு: 2015 வெள்ளத்திற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 5000 வழங்கினார். இத்தனை ஆண்டுகளில் அனைத்து பொருட்களிலும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அப்போதை விட இப்போது பாதிப்புகளும் அதிகம் எனவே இந்த 6000 ஏற்புடையதாக இருக்காது குறைந்தது 12000வது வழங்க வேண்டும். பால் தட்டுப்பாடு இல்லை என பால்வளத் துறை அமைச்சர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு: கால்வாய்களில் பால்கள் கொட்டப்பட்டு இருப்பதும் படகுகளில் பால்கள் விற்கப்படுவது மக்களுக்கு தெரியும் இதை நாங்கள் சொல்லவில்லை. எப்போதும் இது போன்ற வெள்ளங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதிகம் பணியாற்றுவார்கள். ஆனால் இந்த முறை ஒரு தன்னார்வ தொண்டர்களும், சுய உதவிக் குழுக்கள் என யாரும் பணியாற்ற வில்லை. அதற்கு காரணம் திமுக அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. ஒன்றிய அரசு என்று விமர்சிக்கும் முதல்வர் நிதி வேண்டும் என்கிற போது மட்டும் மத்திய அரசு என்று சொல்கிறார் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொள்கிற சக்தி உடையவர்கள் திமுகவினர் என்றார். இந்நிகழ்வில் 87 ஆவது வார்டு வட்டக் கழக செயலாளர் செல்லப்பாண்டி,சிந்தாமணி வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம்,திருப்பரங்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் வக்கீல் ரமேஷ் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story