விழுப்புரம் நகர திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் நகர திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நகர சேர்மன் சக்கரை தமிழ்ச்செல்வி பிரபு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் துணை பொதுச்செயலாளர் பொன்முடி வழிகாட்டிதலின்படி, மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி, ஆலோசனை படி விழுப்புரம் நகர கழக சார்பில் காலை 9.00 மணி அளவில் விழுப்புரம் நகர மன்ற தலைவர் சக்கரை, தமிழ்ச்செல்விபிரபு நகர கழக அலுவலகத்தில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நகர பொருளாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் சோமு, மாவட்ட பிரதிநிதிகள் நந்தா நெடுஞ்செழியன், ஜமாலுதீன் நகர மன்ற உறுப்பினர்கள் சங்கர், கோமதி பாஸ்கர், வசந்த் அன்பரசு, மாவட்ட சிறுபான்மையின் துணை அமைப்பாளர் முகமது அலி, மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் பால்ராஜ் மாவட்ட தொழிலாளர் அணி துணை தலைவர் செல்லத்துரை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் இளையராஜா தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் குருராமலிங்கம் வார்டு செயலாளர்கள் ஸ்ரீதர், ராஜா, ராமலிங்கம், சண்முகம், கலந்து கொண்டனர்.
Next Story