ஸ்டாலின் பிறந்ததினம்; ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகள் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ உண்டு உறைவிட பள்ளி என்ற ஆதரவற்ற குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் தலைமை தாங்கினார் பள்ளி தாளாளர் முன்னிலை வகித்தார். மற்றும் கட்சி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பான திட்டமான காலை உணவு திட்டம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பள்ளி மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வணங்கினர். ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்த்துப் பாடலில் மனம் உருகிய வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நோட்டு புத்தகம் மற்றும் எழுத்து பொருட்கள் என ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அறுசுவையுடன் கூடிய மதிய உணவு விருந்து தனது கையால் பரிமாறி குழந்தைகளுக்கு உணவு அளித்து அவர்களுடன் உண்டு மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சி பார்ப்பவரை நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக முதல்வரின் பிறந்த தின விழா ஆங்காங்கே பேனர் அடித்து கட்-அவுட்டுகள் அமைத்து கொடிகள் நட்டி இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் இதுபோன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றது.