ஸ்டாலினின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஸ்டாலினின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என காங்., மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். 

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என காங்., மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஈரோடு் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து மரப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரச்சாரம் செய்தார் பிரச்சாரத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , புரட்சி என்பது ரத்தத்தை சிந்தி புரட்சி வரும் ஆனால் ஈரோட்டில் பெண்கள் வியர்வையை சிந்தி மோடியை விரட்ட வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அனைத்து தர மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க மோடியை விரட்ட வேண்டும் என்றார்.

நாட்டிலுள்ள நல்லவர்களை மோடி சிறையில் அடைத்து முசோலினி , ஹிட்லர் போல் நடந்து கொள்கிறார் மோடி என்றும் தமிழை பற்றி உயர்வாக பேசி மோடி தமிழ்நாட்டுக்கும் , தமிழ்மக்களுக்கும் துரோகம் செய்வதாகவும் தமிழக முதல்வரின் ஆட்சி தமிழ்நாட்டின் பொற்காலம், ஈரோடு கிழக்கு தொகுதி் இடைத்தேர்தல் வெற்றி காங்கிரஸ்கோ , கை சின்னத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல என்றும் திமுகவிற்கும் , உதயசூரியன் சின்னத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் சரித்திரத்தை மாற்றும் சக்தி ஈரோட்டிற்கு உண்டு என்றார்

Tags

Read MoreRead Less
Next Story