சிங்கனூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம்

சிங்கனூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசார நிகழ்ச்சி சிங்கனூர் புதுக்கால னியில் நடந்தது. இதற்கு மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து, கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் கன்னியம்மாள், நாகஜோதி, வக்கீல் கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதி தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story