நாமக்கல்லில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி!

நாமக்கல்லில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்வை நாமக்கல் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா. ஆர்.ஆனந்த் தலைமையில் 23 வது வார்டு 128 பாகத்தில் வீடு தோறும் கழக சாதனைகளை விளக்கியும், ஒன்றிய அரசின் பாசிச போக்கினை எடுத்துரைத்தும் திண்ணை பிரச்சாரம் மேற்கோள்ளப்பட்டது.இதில் கவுன்சிலர் குட்டி (எ ) செல்வகுமார், வார்டு செயலாளர் தனசேகரன், நகர பொருளாளர் அருள் செல்வன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் "கடல்அரசன்" கார்த்தி, மாவட்ட தொண்டர் அணி சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story