தடங்கத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

தடங்கம் கிராமத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தடங்கம் கிராமத்தில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரசாரம் நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், பொதுக்குழு உறுப்பினர் ஏலகிரி நடராஜன், ஊராட்சி செயலாளர் கந்தசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளையசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், தர்மபுரி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரகு, வாக்குச்சாவடி முகவர் சேட்டு, அறங்காவலர் குழு தலைவர் சேகர், முருகவேல், ஆறுமுகம், சுரேஷ், முனுசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story