கோடை காலம் தொடக்கம் - வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகம்....

கோடை காலம் தொடக்கம் - வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகம்....

வெள்ளரிப்பிஞ்சு

தஞ்சாவூர் பகுதியில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் பகுதியில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கட்டு, கட்டாக பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழரசம், தர்ப்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை வாங்கி விரும்பி குடித்து, சாப்பிட்டு வருகின்றனர். இவற்றில் வெள்ளரிப் பிஞ்சு விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரிப் பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் அதே வேளையில் மருத்துவ குணங்கள் வாய்ந்த வெள்ளரிப்பிஞ்சை ஏராளமானார் வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டு வெள்ளரிப் பிஞ்சு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான தனி வெள்ளரிப்பிஞ்சு ரூ.15 வரை விற்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளையும் வெள்ளரிப் பிஞ்சுகள் அறுவடை செய்யப்பட்டு தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது அவற்றின் விற்பனை மும்முரமாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

Tags

Next Story