ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் - நபார்டு வங்கி இயக்குநர் பேட்டி

ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம், பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை பிறருக்கு கொடுப்பவர்களாக மாற்றுகிறது நபார்டு வங்கி இயக்குநர் பேட்டி
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம், பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை பிறருக்கு கொடுப்பவர்களாக மாற்றுகிறது - தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு நபார்டு வங்கி இயக்குநரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான பேராசிரியர் இராம.சீனிவாசன் பேட்டியளித்துள்ளர். விருதுநகர் தனியார் கல்லூரியில் ( செந்தில் குமாரநாடார் ) மாணவர்களுக்கான தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் நபார்டு வங்கி இயக்குநரும், பாஜக மாநில பொதுச்செயலாளருமான பேராசிரியர் இராம.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுவிதமான தொழில்களை மத்திய அரசின் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் எப்படி தொடங்குவது என்றும், தொழில்முனைவோருக்கு எவ்வாறு இத்திட்டம் உதவுகிறது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும் இளைஞர்கள் தங்களது திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டிற்கு சேவைசெய்ய மத்திய அரசின் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பதும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.கருத்தரங்கில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் இராம.சீனிவாசன்,விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான கல்விநிலையங்கள் இருந்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறது என்றும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க கல்லூரி மாணவர்களுக்கு ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும்,தொழில் முனைவு என்பது கலாச்சாரம்,அதை பார்த்து,பார்த்து வளர்க்க வேண்டும் என்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம், பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை பிறருக்கு கொடுப்பவர்களாக மாற்றுகிறது எனவே விரைவில் ஸ்டார்ட்-அப் அகாடமி ஆரம்பித்து மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.

Tags

Next Story