மாநில செஸ் போட்டி - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஓசூரில் முதல் முறையாக நடைபெறும் மாநில அளவிலான செஸ் போட்டியில் 250க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிப்காட் லைன்ஸ் கிளப் மற்றும் குணம் மருத்துவமனை இணைந்து முதல் முறையாக மாநில அளவிலான செஸ் போட்டிகளை துவக்கி நடத்தினார்கள். இதில் 250க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் செஸ் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், 9, 11, 15, 17 மற்றும் 25 வயது களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு பிரிவாகவும், வெளி நபர்கள் பங்கேற்கும் விதமாக ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறும் சாம்பியன்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசாக வழங்க இருப்பதாகவும், இது போன்ற செஸ் போட்டிகள் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதில் பங்கேற்பவர்களுக்கு சாம்பியன் பட்டத்திற்கான கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்குவதுடன் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story