மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு

மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
கோபால்பட்டியில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மாநில மாநாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் மண்பாண்ட தொழிலாளர்களின் மாநாடு நடைபெற்றது. மண்பாண்டம், மண் காகித பொம்மை, டரகோட்டா, செங்கல், சொருகு ஓடு செய்பவர்கள் என ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் குலாலர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மேலும் இந்த மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story