தூய்மைப் பணியாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மாநில மாநாடு

தூய்மைப் பணியாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மாநில  மாநாடு

மாநில மாநாடு

தூய்மைப் பணியாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மாநில மாநாட்டில், நியாயமான ஊதியம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற சமதர்மக் கொள்கையை அரசு உறுதிசெய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தூய்மைப் பணியாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மாநில மாநாட்டில், நியாயமான ஊதியம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற சமதர்மக் கொள்கையை அரசு உறுதிசெய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு ,தூய்மை பணியாளர்களுக்காக நடத்திய சட்ட விழிப்புணர்வு மாநில மாநாடு, தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க மாநிலத்தலைவர் அன்னமயில் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாநாடு விளக்க உரையாற்றிய வழக்கறிஞரும் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோமின் ராஜ்,சட்ட விழிப்புணர்வு இருந்தால் தான்,சமூக மாற்றம் வரும் என்றும் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள் மத்திய,மாநில அரசுகள் கொண்டுவரும் சட்டங்களின் பலன்களை அறியாமல் இருப்பதாகவும்,துப்புரவுப் பணியாளர்களின் நலனுக்காக எத்தனையோ அரசாணை வெளியிட்டும் தமக்கான சட்ட உரிமைகளைக்கூட தெரியாதவர்களாக இருப்பதாகவும் பேசினார்.

இந்த நிலைமாற தமக்கான சட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றார். இம்மாந்நாட்டில் நியாயமான ஊதியம்,பணிப்பாதுகாப்பு,சம வேலைக்கு சம ஊதியம் போன்ற சமதர்மக் கொள்கையை அரசு உறுதிசெய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச் செயலாளர் சுகந்தி, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பின்பும் மனிதனை கொண்டு மலக்குழியில் மலத்தை அள்ளும் அவலம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் துப்புரவு பொறியியல் துறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை ஏற்படுத்த வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Tags

Next Story