மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குறித்து தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜக மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எரியும் வகையில் தேர்தலில் முழு வீச்சுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆர் எஸ் எஸ் பிரிட்டிஷ் ஆட்சிக்கு சேவகம் செய்தது போல்.
தற்போதும் அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் முகவராக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர்கள் அனைவரையும் மிகப்பெரிய பேரழிவு படுகுழியில் தள்ளி விடத் துடிக்கும் ஆர் எஸ் எஸ், பிஜேபி கும்பலின் மனித குல விரோத தன்மையை மக்களுக்கு புரியவைத்து தேர்தலில் தோல்வியடைய வைக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பி ஜே பி நுழைய முடியாத கோட்டையாக இருக்கக்கூடிய தமிழகத்தில் சில எண்ணிக்கையிலாவது நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. எனவே பிஜேபி நேரடியாக நிற்கக்கூடிய தொகுதிகளில் அனைத்து ஜனநாயக சக்திகளுடனும், பிஜேபி எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பிஜேபி கட்சியை டெபாசிட் கூட பெற முடியாத வகையில் செயலாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது