மாநில அளவிலான சதுர்த்த சரண், ஹீராக்பங்க் விருதுத்தேர்வு முகாம்:

மாநில அளவிலான சதுர்த்த சரண், ஹீராக்பங்க் விருதுத்தேர்வு முகாம்

நாமக்கல் மாவட்டம், குப்பாண்டபாளையம் எஸ்.எஸ்.எம் செண்ட்ரல் பள்ளி வளாகத்தில் சாரண இயக்கத்தில் பயிற்சிபெறும் 5 முதல் 10 வயது வரை உள்ள குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் சதுர்த்த சரண் மற்றும் ஹீராக்பங்க் விருதுகளுக்கான தேர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் புஷ்பா இளவரசன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்வு முகாமினை நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் முதன்மை ஆணையருமான ப.மகேஷ்வரி துவக்கி வைத்தார். தலைமையிடத்து ஆணையரும், திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலருமான பிரபுகுமார், உதவி ஆணையரும் பள்ளிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலருமான குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச்செயலர் து.விஜய் முகாம் சார்ந்த அறிமுக உரையாற்றினார். நாமக்கல், திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த 340 பேர் கலந்துகொண்ட இத்தேர்வு முகாமினை மாநிலத்தலைமையக வழிகாட்டுதல்களின் படி லட்சுமணன், பாஸ்கரன், லதா ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாக நடத்தியது. மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரவீந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.எம் சென்ட்ரல் பள்ளியின் முதல்வரும் மாவட்ட ஆணையருமான மிராஸ்கரீம், எஸ்.எஸ்.எம் லட்சுமியம்மாள் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கமலசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) (இடைநிலை)மற்றும் திருச்செங்கோடு மாவட்ட முதன்மை ஆணையர் விஜயன், மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கல்வி) மற்றும் மாவட்ட சாரண ஆணையர் பாலசுப்ரமணியம், மாவட்டக்கல்வி அலுவலரும் (பொ) (தனியார் பள்ளிகள்) மாவட்ட சாரண ஆணையருமான மரகதம், தலைமையிடத்து ஆணையர் குமார், இரகோத்தமன் ஆகியோர் முகாம் சிறக்க தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பு ஆணையர் விஜயகுமார், தீபக், மணியரசன், லோகேஷ், தாமரைச்செல்வன் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச்செய்திருந்தது.

Tags

Next Story