மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

பேராவூரணி அருகே நடந்த மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேராவூரணி அருகே நடந்த மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில், தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க அசோசியேசன், பட்டுகோட்டை லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி இணைந்து, மாநில அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியை நடத்தினர்.

கல்லூரி தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல் சதுரங்க விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். கலாம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மதிவாணன் வரவேற்றார். சதுரங்க விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேடயம், பரிசுத் தொகையை, தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் கா.இனியன், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜஹவர்பாபு வழங்கினர்.

மேலும், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சுந்தர்பாபு, செயலாளர் லட்சுமிகாந்தன், பொருளாளர் பிரகாஷ், தஞ்சாவூர் செஸ் அசோசியேசன் தலைவர் செந்தில்குமரன், செயலாளர் சிலம்பரசன், பொருளாளர் வினோத், கலாம் பார்மசி கல்லூரி முதல்வர் அன்பழகன், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story