காட்பாடியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் துவக்கம்

X
சதுரங்க போட்டி
காட்பாடியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் துவக்கம். மாநில முழுவதிலும் இருந்து சுமார் 900 மாணவ,மாணவிகள் பங்கேற்பு:
பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். இந்த சதுரங்கப் போட்டியில் மாநில முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்து,900 மாணவ மாணவிகள் பங்கேற்று, மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், வயது அடிப்படையில் தனி தனி பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக,இரண்டு லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும் இதில்வெற்றி பெறும் மாணவ மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவார்கள். அதில் வெற்றி பெற மாணவ மாணவிகள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெற்றி என்பது தொடர்ந்து நமக்கு கிடைக்காது, ஆனால், தோல்வியை கண்டு பயப்படாமல் அதை சமாளிக்கும் வகையில் மாற்று வழியை யோசிக்க சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் பயன்படுகிறது. இந்த விளையாட்டு போட்டிகள் பல விதிமுறைகளை பயன்படுத்தி விளையாடுவதால் நம்முடைய வாழ்க்கைக்கு அவை பயனுள்ளதாக அமையும். எந்த நேரத்திலும் வெற்றி கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு மாற்று வழியை கடைப்பிடித்து வெற்றிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
Tags
Next Story
