மாநில அளவிலான அரசு அலுவலர் விளையாட்டு போட்டி தேர்வு

கோப்பு படம்
அரசு ஊழியர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் புது தில்லியில் 15.12.2023 முதல் 21.12.2023 வரை நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான தேர்வுகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளன. State Selection Trials:- 1. Cricket Government Hr.Sec School Pudur 11.12.2023 8.00 am 2. Football Jawharlal Nehru Stadium Chennai 11.12.2023 8.00 am 3. Swimming Aquatic Complex Chennai 11.12.2023 8.00 am இப்போட்டியில் பங்கேற்க நிபந்தனைகள் பின்வருமாறு:- தேர்வு போட்டிக்கு பயணப்படி / தினப்படி வழங்கப்படமாட்டாது.மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் / வீராங்கனைகளுக்கு பயணப்படி / தினப்படி வழங்கப்படும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வீரர் / வீராங்கனைகள் தங்களது விவரத்தினை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
