ராசிபுரம் அருகே மாநில அளவில் நடைபெற்ற கைபந்துபோட்டி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பேரூராட்சியில் பார்க்கவன் கைபந்து குழுசார்பில் 24ம் ஆண்டாக ஆண்கள் &பெண்களுக்கான மாநில அளவிலான கைபந்துபோட்டி இரண்டுநாட்களாக நடைபெற்றது. இதில் சென்னை,சேலம், திருச்சி, கோவை, ஈரோடு , தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் & மற்றும் ஆண்கள் அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். பெண்கள்அணியின் இறுதிப்போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியினரும் சேலம் அணியிரும் மோதினர் இதில் 25/10 --25/16 என்ற நேர்செட்டில் கோபிசெட்டிபாளையம் அணியினர் வெற்றிபெற்றனர்.
இதேபோல் நடைபெற்ற ஆண்கள் பிரிவில் சேலம் அணியும் பட்டணம் பார்க்கவன் அணியினருக்கும் நடைபெற்ற இறுதிபோட்டியில் 25-16 18-25 17-25 என்ற புள்ளிகணக்கில் பார்க்கவன் அணியினர் வெற்றிபெற்றனர். ஆண்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15,000 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.12.000, மூன்றாம் பரிசு ரூ.10.000, நான்காம் பரிசு ரூ.8.000, அதே போல் பெண்களுக்கான போட்டிகள் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10.000, ஆயிரம் இரண்டாம் பரிசு ரூ.8000, மூன்றாம் பரிசு ரூ.6000, நான்காம் பரிசு ரூ.4000 வழங்கப்பட்டது.
இந்த பரிசளிப்பு விழாவில் பட்டணம் பேரூராட்சி துணைத்தலைவர் பொன். நல்லதம்பி , பொறியாளர் என். மாணிக்கம், நாமக்கல் மாவட்ட கைபந்துகழக துணைச்செயலாளர் ஜெகன்,பி.என்.ஆர். கண்ணன், முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி கே.மணிமாறன், பிஜேபி பட்டணம் கே.வள்ளிராஜா, தங்கம் அசோசியேட்ஸ் எம்.சிபி சக்ரவர்த்தி, சீனியர் செலக்சன் கமிட்டி மெம்பர் சேலம் கிரிக்கெட் அசோசியேசன் எம்.எஸ்.பிரமோத், மற்றும் பட்டணம் அதிமுக பேரூர் செயலாளர் கே.பாலசுப்பரமணியம், ஆர்.ராஜசேகர், பி.சுரேஷ், எம்.பிரபு, பார்க்கவன் கைப்பந்து குழு கே.தம்பிதுரை, கே.அறிவழகன், பட்டணம் பி.டி.எம்.ராஜேந்திரன், சேலம் பிஜேபி நிர்வாகி ஆர்.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர் வீராங்கனை களுக்கு ரொக்கம் பரிசுகளையும், கோப்பையும் வழங்கி சிறப்பித்தனர்.