நாகையில் மாநில அளவிலான கபாடி போட்டி: அரியலூர் அணி சாம்பியன்
போட்டியில் ஆக்ரோஷமாக செய்யப்பட்ட வீரர்கள்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை எஸ்.என்.செந்தில்குமார் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தொடங்கி வைத்த இப்போட்டியில், சேலம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,
தஞ்சை,நாகை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 30,அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன. நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரியலூர் மாவட்டம் வெண்ணங்குழி கபாடி அணியுடன், சேலம் மாவட்டம் சாமி கபாடி அணியினர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெண்ணங்குழி கபாடி அணியினர் 33,புள்ளிகளும் அதனை எதிர்த்து விளையாடிய சேலம் சாமி கபாடி அணியினர் 20,புள்ளிகள் பெற்றனர். இப்போட்டியில் வெண்ணங்குழி கபாடி அணியினர் கூடுதலாக 13,புள்ளிகள் எடுத்து முதல் பரிசான 50, ஆயிரம் ரொக்கம் மற்றும் 30, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கோப்பை என சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தன ர