திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி

திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி

வெற்றி

பெற்ற அணிகளுக்கு பரிசு


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயலில் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி ,சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. முதலிடத்தை இலுப்பூர் அணியும், இரண்டாம் இடத்தில் ஆலவயல் அம்பாள் அணியும், மூன்றாம் இடத்தை கண்டெடுத்தான் பட்டி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலம் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சாமிநாதன் ஆகியோர் பரிசு வழங்கினர். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

Tags

Next Story