மாநில அளவிலான மார்சியல் ஆர்ட் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி

ராசிபுரத்தில் நடந்த 15வது மாநில அளவிலான மார்சியல் ஆர்ட் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலையில் உள்ள வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு ஷோடோகன் கராத்தே அகாடமி சார்பில், 15வது மாநில அளவிலான மார்சியல் ஆர்ட் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோயமுத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியானது கட்டா குமிட்டி, குழு கட்டா, குலேட்டிசோ, டி டூல்ஸ் ஆகிய பிரிவுகளில் 25 - 30, 30 - 35, 35 - 40 ஆகிய உடல் எடை பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியை பள்ளியின் தலைவர் மாணிக்கம், சுந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு ஷோடோகன் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சரவணன் தலைமையில் இந்த போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியின் நடுவர்களாக, கிருஷ்ணன் மாணிக்கம், பிரபு, வெங்கடாசலம், பன்னீர் விக்னேஷ், கிஷோர், ராஜகுமாரி, கோகிலா, தனலட்சுமி, தீபா ஆகியோர் செயல்பட்டனர். 14 - 25 வயதுடையவர்கள் பங்கேற்ற கட்டா பிரிவில் முதல் பரிசை ரிக்சன், 2ம் பரிசு ஆசின், 3ம் பரிசு கனிஷ்கர், விஷ்ணு பெற்றனர். 30 - 35 வயதுடையவர்கள் பங்கேற்ற கட்டா பிரிவில் முதல் பரிசு குகன், 2ம் பரிசு பிரனேஷ், 3ம் பரிசு ஷரீத் விஸ்வா, பிரதீஷ் பிடித்தனர். 35 - 40 வயதுடையவர்கள் பங்கேற்ற குமிட்டி பிரிவில் முதல் பரிசு கீர்த்தி, 2ம் பரிசு தனுஸ்ரீ, 3ம் பரிசு தர்ஷினி பெற்றனர். 25 - 30 வயதுடையவர்கள் பங்கேற்ற குமிட்டி பிரிவில் முதல் பரிசு அனுசுயா, 2ம் பரிசு, ஹேமதர்ஷினி, 3ம் பரிசு ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி சிறப்பித்தனர். மாணவர்கள் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் தற்காப்பு கலை அவசியம் குறித்து மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story