சேலத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

சேலத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் வைரவிழா ஆண்டையொட்டி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளனர் குறிப்பாக 50க்கும் மேற்பட்ட அறைகளில் 1100 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5000 மாணவ மாணவிகள் இந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த அறிவியல் கண்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவில் ஆய்வு செய்து வருகிறது .

இதனை நினைவு கூறும் விதமாக சந்திராயன் ராக்கெட் விண்ணில் பாய்ந்து செல்வது போலவும் விக்ரம் லென்டர் நிலவில் தரையிறங்குவது போலவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர் இந்த படைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மேலும் 1100 படைப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சிறப்பான படைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கபட உள்ளது இந்த அறிவியல் கண்காட்சியை ஹோலி கிராஸ் பள்ளியின் தலைமை நிர்வாகி சந்தோஷ் மற்றும் பள்ளியின் முதல்வர் சேசுராஜ் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story