மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

கைப்பந்து போட்டி

தேனியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
தேனியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தேனி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஆண்களுக்கான 19 வயதிற்கு உட்பட்ட கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில் மாநில அளவில் 28 அணிகள் பங்கேற்றன. திண்டுக்கல் அணி முதல் பரிசை வென்றது. திருச்சி அணி 2ம் இடம், மதுரை அணி 3ம் இடம், விழுப்புரம் அணி 4ம் இடம் பிடித்தன. மாநில கைப்பந்து கழக தலைவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராமசுப்பிரமணி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story