மாநில அளவிலான எறிபந்து போட்டி - கமாக் பள்ளி முதலிடம்!

மாநில அளவிலான எறிபந்து போட்டி - கமாக் பள்ளி முதலிடம்!
X

வெற்றி பெற்ற மாணவர்கள் 

மாநில அளவிலான எறிபந்து போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்த சாதனை படைத்துள்ளது. 

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் புதுக்கோட்டை எம்ஆர்எம் பள்ளியில் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டிகள் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதிவரை நடைபெற்றன. இதில் தமிழகத்திலிருந்து 38 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 12 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறப்பாக விளையாடிய கமாக் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் இறுதி போட்டியில் சென்னை மாவட்டத்தை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பாரட்டு சான்றிதழ்களை ஆறு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்று தூத்குக்குடி வந்த மாணவர்களுக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெற்றோர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில், கமாக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரைக்கு பெற்றோர்கள் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர்கள் காசி ராஐன், கண்ணன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மேகலா மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story