வேலூரில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி
வேலூரில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி
வேலூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மகளிர் ஓபன் கைப்பந்து போட்டி 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடைபெற்றன. போட்டியை பிரகாஷ் சாமுண்டீஸ்வரி, தொழிலதிபர் பி.தினேஷ், சரண்யா, எல். கே.எம்.ஹேமநாத் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18 அணிகள் கலந்து கொண்டன.
அதில் சென்னை பனிமலர் கல்லூரி அணி முதல் பரிசும், சென்னை மினி ஸ்போர்ட்ஸ் பவுண் டேஷன் அணி 2-வது பரிசும், சேலம் சக்தி கைலாஷ் அணி 3-வது பரிசும், ஈரோடு குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி 4-வது பரிசும், சென்னை எத்திராஜ் கல்லூரி அணி 5-வது பரிசும், வேலூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 6-வது பரிசும், ஓசூர் அட்வைத் வாலிபால் கிளப் அணி 7-வது பரிசும், வேலூர் டி.கே.எம். கல்லூரி அணி 8-வது பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.